Diploma in Tanjore Paintings (D.T. P.) -- [தஞ்சை ஓவியம் பயிற்சி]

இன்று வாழ்க்கை இயந்திரத் தனமாக ஆகிவிட்டது. தினமும் காலையில் எழுந்தால் இரவு தூங்கும் வரை எக்கச்சக்கமான பரபரப்பு. ஏகப்பட்ட டென்சன். நல்ல காற்றைக் கூட சுவாசிக்க முடியவில்லை. மாசுக் கட்டுப்பாடு என்பது விளம்பர வாசகமாக மட்டுமே இருக்கிறது. உலகமே இரைச்சல் மயமாக உள்ளது. எங்காவது அமைதியாக அழகை ரசிக்கலாம் என்றால் எங்கே போவது? இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? நிச்ச யமாக இருக்கிறது. நல்ல புத்தகங்களுக்கு இணையாக நல்ல ஓவியங்களும் மனதைக் கவரும். நல்ல ஓவியங் களப் பார்த்து ரசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். அதுவும் தேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புராதனமான ஓவியங்களக் கண்டு களிப்பது எவருக்கும் இனிமை தரும். மனம் சாந்தி பெறும். இத்தகைய ஓவியங்களப் பார்த்து ரசிப்பதோடு மட்டுமல்லாமல், படைக்கும் திறமையும் உங்களுக்கே வந்துவிட்டால்... நினைக்கவே சுகமாக இருக்கிறதல்லவா.

தமிழகத்தின் தொன்மையான கலையாகிய, தென்னகத்தின் நெற்களஞ்சியமாம், காவிரிக் கரையில் நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளயாடும் தஞ்சை தரணியின் புராதனக் கலைகளின் மணிமகுடமாகத் திகழும் தஞ்சாவூர் பாணி ஓவியங்கள வரையுங்கள். மனிதர்களப் படைக்கும் பிரம்மாவாக அல்ல தெய்வங்களயே உருவாக்கும் பிரம்மாக்களாகத் திகழுங்கள். தெய்வாம்சம் பொருந்திய தஞ்சாவூர் ஓவியங்கள வரையக் கற்று அளவில்லாத மனமகிழ்ச்சி அடையுங்கள். சிறிய, பெரிய சித்திரங்களப் படைத்து உங்கள் இல்லத்தை அலங்கரியுங்கள். உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக வழங்குங்கள். பெரிய நிறுவனங்கள், அலுவலகங்கள், கலாரசனை மிக்க செல்வந்தர்கள் ஆகியோரிடம் தஞ்சாவூர் பாணி ஓவியங்கள விற்பனை செய்யுங்கள். பெரும் பொருள் சம்பாதியுங்கள். பழமை மணம் கமழும் தஞ்சாவூர் ஓவியங்களின் மதிப்பு உங்களுக்குத் தெரியுமா? ஒரு சிறிய தஞ்சாவூர் ஓவியம் ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு பெரிய ஓவியம் இருபதாயிரம் ரூபாய் வரை விலைபோகும் என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா?

இத்தகைய அரிய கலைப் படைப்பை உருவாக்கும் முயற்சியும் திறமையும் உங்களிடம் பொதிந்து கிடப்பதை நீங்கள் அறிவீர்களா? இந்தப் பயிற்சியில் சேருங்கள். உங்கள் வாழ்வின் திருப்பு முனையை நீங்கள தீர்மானியுங்கள். நேர்முகப் பயிற்சி மட்டுமே மிழிஐளூலி ஸ்ரீழிஷ்ஐமிஷ்ஐஆவி என்னும் தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் வரைவதற்கு அஞ்சல் வழிப் பயிற்சி இல்லை. நேர்முகப் பயற்சி மட்டும் வைத்திருக்கிறோம். காலங்காலமாக குரு சிஷ்யர் முறையில் வம்சாவளியாகக் கற்றுக் கொள்ளப்படும் இக்கலையை, கலையை வளர்க்கும் நோக்கத்தோடு, கலையை பரவலாக்கும் எண்ணத்தோடும், கலை உள்ளம் படைத்த, கலாரசனை மிக்க உங்களுக்குக் கற்றுத் தருவதற்கு அஜந்தா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் முன்வந்துள்ளது. மூடி மறைக்கப்பட்ட இத் தொழிலின் ரகசியங்கள, ஒளிவு மறைவு இன்றி கற்றுத்தர இருக்கின்றோம்.

பாடத்திட்டம்

அஜந்தாவின் இருபத்து முன்று ஆண்டு கலைப்பயணத்தில், நீண்ட நெடிய ஆய்வுக்குப்பின், இத்துறையின் கைதேர்ந்த வல்லுநர்களின் தொழில் நுணுக்கங்கள இணைத்து, பாடங்கள் யாவர்க்கும் எளிதில் புரியும் வண்ணம், பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அருமையான செயல் திட்ட முறையில் நேரில் கற்பிக்கப்படுகிறது.

ஓவியப் பலகைத் தயார் செய்வதில் தொடங்கி, சித்திரங்கள் ஸ்கெட்ச் செய்வது, மரபு சார்ந்த செந்தூரம், ஜாதிலிங்கம், மஞ்சள், காவி போன்ற டெம்பரா வண்ணங்களக் குழைப்பது, சித்திரம் உருவாக்குவது, தங்க ரேக்குகள் அமைப்பது, இயற்கையான நவரத்தினக் கற்கள் பதிப்பது, செட்டி நாட்டு முறையில் பிரேம் போடுவது, படங்கள மார்க்கெட்டிங் செய்வது போன்ற அனைத்தும் படிப்படியாகக் கற்பிக்கப்படும்.

பயிற்சிக்காலம்

ஒருவாரம் ஏழு நாட்கள் காலை முதல் மாலை வரை முழு நாள் தவம் மாணவர்களின் கற்றுக் கொள்ளும் திறமையைப் பொறுத்து ஓரிரு நாட்கள் கூடுதலாக ஆகலாம். வேறு சிந்தனையின்றி முழு கவனத்தோடு, இந்த தெய்வீகக் கலைக்கு உங்கள அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பயிற்சிக் காலத்தில் மாணவர்கள் சென்னையில் தங்கவேண்டும். உணவு, தங்குமிடம் அவரவர் சொந்தப் பொறுப்பாகும். அவரவர் வசதிக்கேற்ப தனியாகவோ, உறவினர் இல்லங்களிலோ தங்கிக் கொள்ளலாம். எனினும் மாணவர்களின் நலன் கருதி அஜந்தாவிலும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான கட்டணம் ரூ.100/ ஆகும். ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித்தனி வகுப்புகள். வேறுவேறு தேதிகளில் நடைபெறும்.

பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள் :

* கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்து இருந்தால் போதும்.
* ஓரளவு வரையத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆர்வமாவது அவசியம் தேவை.
*ஏற்கனவே அஜந்தாவில் ஏதேனும் ஒரு பயிற்சியைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* அல்லது பள்ளி கல்லூரிகளில் ஓவியப்போட்டிகளில் கலந்துகொண்ட சான்றிதழ்கள் இருந்தால் நல்லது.


பயிற்சிக் கட்டணம்
இது ஒரு பொழுது போக்கு பயிற்சியல்ல. ஒரு மேன்மையான கலையின் ஒரு பிரிவை உன்னிப்பாகக் கற்றுக் கொள்ளும் பயிற்சியாகும். இதன்மூலம் நீங்கள் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் திகழவும், பலரது பாராட்டைப் பெறவும், உங்களுக்கு அளவில்லாத மனமகிழ்ச்சி ஏற்படவும். அதிகமான பொருளீட்டும் ஒரு தொழிலாக அமைத்துக் கொள்ளவும் உதவும் வகையில் இப்பயிற்சி அமைந்துள்ளது.

இதற்கான பயிற்சிக் கட்டணம் ரூ. 5,000/
பொருட்கள் வாங்க செலவு ரூ. 1,000/
ஆக மொத்தம் ரூ.6,000/


இந்தப் பயிற்சிக் காலத்தில் ( ஒரு வாரத்தில் ) பயிற்சி தொடங்கி முடியும் போது, நீங்கள் ஒரு அற்புதமான தஞ்சாவூர் ஓவியம் வரைந்து முடித்து இருப்பீர்கள். இன்னொரு படம் வரையத் தொடங்கி இருப்பீர்கள். இந்த இரண்டு படங்களிலேயே நீங்கள் செலுத்திய பயிற்சிக் கட்டணம் உங்களுக்குக் கிடைத்துவிடும். உங்களுக்காக வாங்கும் பொருட்கள உங்களுக்கே கொடுத்துவிடுவோம். இந்தப் பொருட்களக் கொண்டு மேலும் சில படங்கள நீங்கள் படைக்கலாம். உங்கள் படங்கள் சிறப்பாக இருப்பின் நல்ல விலைக்கு விற்க நாங்களும் உதவுவோம்.

பயிற்சியில் சேருவது எப்படி?

இந்த விவரப் புத்தகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ரூ. 1000/
( ஆயிரம் ரூபாய் மட்டும் ) க் கான மணியார்டர் அல்லது டிராப்ட் எடுத்து அனுப்ப வேணடும்.
விண்ணப்பம் வந்து சேர்ந்ததும், உங்கள் பயிற்சிக்கான கால அட்டவணை உங்களுக்கு அனுப்பப்படும். அந்தத் தேதியில் நீங்கள் மீதியுள்ள பயிற்சிக்கட்டணத்தைச் செலுத்தி தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். காலதாமதமின்றி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள். பதிவுக்கட்டணம் ரூ. 1000/ க்கான மணியார்டர் ரசீது / டிராப்டை இணைத்து அனுப்புங்கள். நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். பயிற்சியின் முடிவில் டிப்ளமோ, சான்றிதழ் வழங்கப்படும்.

 

 

 

More Details